குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

குமாரபாளையத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி, தமிழ் சிந்தனைப் பேரவை, தமிழ்நாடு அரசு காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி, தமிழ் சிந்தனைப் பேரவை, தமிழ்நாடு அரசு காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் தவமணி, தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் ரமேஷ்குமார், பேரணியை துவக்கி வைத்தனர். போதை விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைககளில் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

ராஜம் தியேட்டர் முன்பு துவங்கிய பேரணி பல முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. இதில் எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், மாதேஸ்வரன், ராம்குமார், பேரவை நிர்வாகிகள் கோபி ராவ், பராசக்தி, தன்னார்வலர்கள் சித்ரா, உஷா, கல்லூரி பேராசிரியர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture