அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா  கொண்டாட்டம்
X

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

குமாரபாளையம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் தலையாசிரியர் முருகன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகள், கலைப் போட்டிகள், பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடிவினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்கள், தமிழ்க்கூடல் போட்டி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பி.டி.ஏ. நிர்வாகிகள் நாச்சிமுத்து, சவுந்திரம், துரைசாமி பரிசுகள் வழங்கினர். ஆசிரியைகள் காந்தரூபி, ராணி மரகதவள்ளி உள்பட பெற்றோர்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

அரசு பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

குமாரபாளையம் புத்தர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் தலைமை

ஆசிரியர் மோகன், பி.டி.ஏ. துணை தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தனர். பி.டி.ஏ. பொருளர் தங்கவேல் தேசியக்கொடியேற்றி வைத்தார். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்கள், மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட இலக்கியம், கலை, பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலர் வள்ளியம்மாள், பாலசுப்ரமணி, மாதேஸ்வரன், முருகன், தண்டபாணி, உள்பட பலர் பரிசு வழங்கினர்.

மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்

இதே போல் வாசுகி நகர் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் தலைமை ஆசிரியை நாகரத்தினம் தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, ஒன்றிய அ.தி.மு.க. செயலர் குமரேசன், பி.டி.ஏ. நிர்வாகிகள் தம்பி, ஊராட்சி மன்ற துணை தலைவி நாகவள்ளி, பொதுநல ஆர்வலர் பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் முனியப்பன், தி.மு.க. நிர்வாகி சண்முகம் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story