அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு முதல்வர் ரேணுகா பரிசு வழங்கினார்.
குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்கு உதவுதல், கல்லூரிக்கு தேவையான அத்தியாவசிய மான உபகரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாணவியர்களுக்கு அரசு கல்லூரியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கணிதத்துறை மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் வாசுதேவன், பத்மாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் மன்ற விழா கருத்தரங்கம் முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது.
தமிழ் பேராசிரியர் மூர்த்தி பங்கேற்று, திருக்குறளில் மேலாண்மை என்ற தலைப்பில் பேசியதாவது: வணிக நிர்வாகவியல் மாணவர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க திருவள்ளுவர் கூறிய வழியில் நடக்க வேண்டும், மேலாண்மை பண்புகளான காலம் தவறாமை, தன்னம்பிக்கை, கூர்மையான சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு பாடங்களை கற்பதோடு நின்று விடாமல் மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். இதில் துறைத் தலைவர் சரவணாதேவி, பேராசிரியர்கள் கண்ணன், அன்புமணி, காயத்ரி மற்றும் 130 பி.பி.ஏ. பாடப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu