காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம்

காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா  ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஜன. 21ல் நடைபெற உள்ளது.கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கமிட்டி தலைவர் ரகுநாதன் தலைமையில் கோவில் வளாகத்தில் நடந்தது.

வடக்கு நகர தி.மு.க செயலாளர் மற்றும் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர தி.மு.க செயலாளர் ஞானசேகரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இதில் யாகசாலை அமைப்பது, அன்னதானம், தீர்த்தக்குடங்கள் ஊர்வலம், முக்கிய விருந்தினர்களை வரவேற்பது, குமாரபாளையம் நகர பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பது உள்ளிட்டவைகளுக்கு குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கமிட்டி உறுப்பினர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், குண்டம் பராமரிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

கார்த்திகை அமாவாசை நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.



Tags

Next Story