அரசு பள்ளிக்கு இரும்பு கிரில்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

அரசு பள்ளிக்கு இரும்பு கிரில்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
X

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இரும்பு கிரில்கள் வழங்கினர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இரும்பு கிரில்கள் வழங்கினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்பொழுது நூற்றாண்டை நெருங்கும் நிலையில், கடந்த வருடம் தமிழக அரசு சார்பில் புதிதாக எட்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதில் ஐந்து வகுப்பறைகள் மாடியில் கட்டப்பட்டன. இவற்றிற்கு பக்கவாட்டு தடுப்பு சுவர்கள் எழுப்பப்படாமல் இருப்பதால் மாணவர்கள் விளையாடும் போது மாடிகளில் இருந்து தவறி விழும் வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்க, தலைமை ஆசிரியர் ஆடலரசு, முன்னாள் மாணவர்களுக்கு இரும்பு கிரில்கள் அமைக்க கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று 1978-80 ல் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் இணைந்து சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரும்பு கிரில்களை தலைமை ஆசிரியர் ஆடலரசு மற்றும் பி.டி.ஏ. நிர்வாகி சுப்பிரமணியிடம் வழங்கினர்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1978 முதல் 1980 வரையிலான நாட்களில் கல்வி பயின்ற மாணவ, மாணவியர்கள் 43 ஆண்டுகளுக்கு பின் நேற்று முதன் முதலாக ஒன்று சேர்ந்த நிகழ்ச்சி நடந்தது. முதன் முதலாக பிளஸ் 1, பிளஸ் 2, தொடங்கப்பட்ட இந்த ஆண்டில் , இந்த பள்ளியில் மாணவர்கள், மாணவியர்கள் சேர்ந்துதான் கல்வி பயின்றார்கள். சில ஆண்டுகளுக்கு பின்னர் மாணவியர் சேர்க்கை அதிகம் வர, வர, இதே வளாகத்தை இரண்டாக பிரித்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஆடலரசு அங்கப்பன் தலைமை வகித்தார்.

முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்கு உதவுதல், பள்ளிக்கு தேவையான அத்தியாவசியமான உபகரணங்கள் வாங்கி தருவது, ஒவ்வொரு ஆண்டும் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு, புதிய மாணவ, மாணவியர்களுக்கு அரசு பள்ளியின் சிறப்பம்சம் குறித்து எடுத்துரைத்தல், அரசு தேர்வுக்கு தேவையான உதவிகளை புதிய மாணவ, மாணவியர்களுக்கு செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் மாணவர்களில் குறிப்பிட்ட சிலர் உயர்ந்த பொறுப்புகளில் உள்ளனர். இதில் தாமரைக்கண்ணன் ஈரோடு வாசவி கல்லூரி பொறுப்பு முதல்வராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் ,செல்வகுமார் சென்னையில் எஸ்.கே. மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவ பணி செய்து வருகிறார். இன்னும் பலர் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அங்கப்பன், சிவகுமார், குமாரசாமி உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture