தி.மு.க.வில் இணைந்த 164 பேர்

தி.மு.க.வில் இணைந்த  164 பேர்
X

பல்லக்காபாளையத்தில் மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி மாவட்ட செயலர் மதுரா செந்தில், வடக்கு ஒன்றிய செயலர் நாச்சிமுத்து தலைமையில் நடந்தது.

பல்லக்காபாளையத்தில் மாற்று கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பல்லக்காபாளையத்தில் மாற்றுக் கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமையில், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நாச்சிமுத்து ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடந்தது.

அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணி செயலாளர் வசந்தா, மகளிர் அணி துணை செயலாளர் கீதாமேரி ஆகியோர் தலைமையில் 130 பேரும், தே.மு.தி.க கிளைச் செயலாளர் தனபால், ஆரோக்கியசாமி மற்றும் கிளை பிரதிநிதிகள் பூபதி மாதேஷ் ஆகியோர் தலைமையில் 75 பேரும், பா.ஜ.க ஒன்றிய மகளிர் அணியை சார்ந்த சுகுணா ராணி பத்மாவதி தலைமையில் 60 பேர் மற்றும் சந்தியா, ரேவதி, கிருஷ்ணவேணி, மல்லிகா, சாரதி உட்பட 29 பேரும் தங்களை தி.மு.க கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதில் பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜான் பீட்டர், ராஜ், கார்த்தி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சௌந்தரம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முரளி, இளைஞர் அணி நிர்வாகிகள் மஞ்சுநாதன், உதயகுமார், மாவட்ட, ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து பங்கேற்றனர்.

அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க, பல கட்சியில் இருந்து, தங்கள் கட்சிக்கு வந்தது போல் பல நிகழ்சிகளை நடத்தி, தங்கள் மூத்த நிர்வாகிகளை திருப்தி படுத்தி வருகிறார்கள். அனைத்து கட்சியினரும் பூத் கமிட்டி கூட்டம் அமைத்து நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்கள். கட்சி மாநாடுகள் நடத்தி மக்கள் செல்வாக்கை நிரூபித்து வருகிறார்கள். ஆளும் கட்சியினர் பதிவியை விடக்கூடாது என்றும், எதிர்கட்சியினர் விட்ட இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்றும், மூன்றாம் இடத்தில் இருக்கும் கட்சியினர் இந்த முறை வாய்ப்பை தவற விடக்கூடாது எனவும் போராடி வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்



Tags

Next Story
ai in future agriculture