புதிய தினசரி சந்தையில் புதிய கடைகள் ஒதுக்கும் பணி தொடக்கம்

புதிய தினசரி சந்தையில் புதிய கடைகள்   ஒதுக்கும் பணி தொடக்கம்
X

குமாரபாளையம் புதிய தினசரி சந்தையில் புதிய கடைகள் ஒதுக்கும் பணி தொடங்கியது.

குமாரபாளையம் புதிய தினசரி சந்தையில் புதிய கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கும் பணி தொடங்கியது.

குமாரபாளையம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தினசரி சந்தை அண்மையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

தற்காலிகமாக அருகில் உள்ள பஸ் ஸ்டாண்டில் செயல்பட்டு வரும் தினசரி சந்தை விரைவில் புதிய தினசரி சந்தை கட்டிடத்தில் செயல்பட உள்ளது. அதற்காக வியாபாரிகளுக்கான கடை ஒதுக்கீடு செய்யும் பணி மற்றும் அவர்களின் கடை அளவுக்கு தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இப்பணியை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆலோசனை கூறினார். நகர மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்,கோவிந்தராஜ் மார்க்கெட் சங்கத் தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் செந்தில்குமார், கதிரேசன், விக்னேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் ரூபாய் 10.38 லட்சம் மதிப்பிலான காய்கறி, பாஸ்ட்புட் மற்றும் பூ விற்பனை செய்திட 13 விற்பனை வண்டிகள் வழங்கும் விழா நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, சாலையோர வியாபாரி களுக்கு தள்ளுவண்டி மற்றும் அதற்கான உத்திரவு நகல் ஆகியவற்றை வழங்கினார்.

பொறியாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ஜான்சிராணி, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், ராஜ், தி.மு.க. நிர்வாகிகள் சரவணன், ஜுல்பிகார் அலி, கந்தசாமி, கதிரேசன், விக்னேஷ், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.




Tags

Next Story