சங்கரய்யா மறைவுக்கு அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்!

சங்கரய்யா மறைவுக்கு அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்!
X

படவிளக்கம் : சங்கரய்யா மறைவுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் குமாரபாளையத்தில் மவுன ஊர்வலம் நடந்தது.

சங்கரய்யா மறைவுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் குமாரபாளையத்தில் மவுன ஊர்வலம் நடந்தது.

சங்கரய்யா மறைவுக்கு அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்

சங்கரய்யா மறைவுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் குமாரபாளையத்தில் மவுன ஊர்வலம் நடந்தது.

சுதந்திர போராட்ட வீரரும், தகைசால் விருது பெற்றவரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான சங்கரய்யா நேற்றுமுன்தினம் உடல்நலமின்றி இறந்தார். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது திருவுருவப்படத்திற்கு பொதுமக்கள் மலர்மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தியவாறும், மாணவ, மாணவியர், பொதுநல ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினர். இதன் ஒரு கட்டமாக அனைத்து கட்சியினர் சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையிலிருந்து, நகராட்சி அலுவலகம் வரை மவுன ஊர்வலம் சி.பி.எம். நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. நகராட்சி அலுவலகம் காந்தி சிலை அருகே வைக்கப்பட்ட சங்கரய்யாவின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் ஜானகிராமன், தி.மு.க. செல்வராஜ், ஜெயபிரகாஷ், தே.மு.தி.க. நாராயணசாமி, மகாலிங்கம், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, தி.க. சரவணன், சி.பி.ஐ. கணேஷ்குமார், வக்கீல் கார்த்தி உள்பட பலர் பங்கேற்று, சங்கரய்யாவின் சாதனைகளை நினைவு கூர்ந்தனர்.

ந. சங்கரய்யா விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 ஆவது‍ மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்‌க்சிஸ்ட்) உருவான போது‍ இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்..

கோவில்பட்டியை சேர்ந்த நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.இடைநிலை படிப்பிற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1937 ஆம் ஆண்டில் சேர்ந்தார். வரலாறு‍ பிரதான பாடமாகும். அமெரிக்கன் கல்லூரியின் பரிமேலழகர் தமிழ்க்கழகத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1938 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சென்னை மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு‍ சுதந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு‍ வந்தனர். இதேபோல் மதுரையிலும் மதுரை மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1940 ஆம் ஆண்டு‍ ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.

1957 & 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார். 1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்தியகுழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியகுழுவில் இருந்து வருகிறார். 1995 இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என்.சங்கரய்யா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது, முதல் முறையாக சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. என். சங்கரய்யா 2023 நவம்பர் 15 இல் சென்னை, அப்பலோ மருத்துவமனையில் தனது 102-ஆவது அகவையில் காலமானார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!