எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
குமாரபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
குமாரபாளையம் ரோட்டரி சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடத்தப்பட்டது. தலைவர் சந்திரன், தனியார் கல்லூரி தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தனர். எய்ட்ஸ் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகள் கைகளில் ஏந்தியவாறு மாணவியர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இது பற்றி பேராசிரியர்கள் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, தொற்றுள்ள கர்ப்பிணி பெண்களிடமிருந்து குழந்தகளுக்கு பரவும், ஊசிகள் பகிர்தல் மூலம் பரவும், பரிசோதிக்கப்படாத இரத்த பரிமாற்றம் முறை மூலம் பரவும், பச்சை குத்துதல்,
கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல் ஆகியன மூலம் எய்ட்ஸ் பரவும் என்று எடுத்துரைத்தனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உரிமம் பெற்ற ரத்த வங்கியின் மூலம் ரத்தம் பெறுதல், ஒருமுறை ,மட்டுமே ஊசியை பயன்படுத்துதல், கர்ப்பிணி பெண்கள் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வதால், குழந்தைக்கு எச்.ஐ.வி. வராமல் தடுக்கலாம், என்பது உள்ளிட்ட கருத்துககள் எடுத்துரைக்கப்பட்டன.ரோட்டரி நிர்வாகிகள் செயலர் மூர்த்தி, முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம்
குமாரபாளையத்தில் பவானி குமாரபாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் அர்ணவ் ஆர்தோ கேர் சார்பாக இலவச எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் பிரபாத் மகேந்திரன் தலைமை தாங்கினார். குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் சஷ்டி விஜய்கண்ணன் முகாமை தொடக்கி வைத்து வாழ்த்தி பேசினார்.
டாக்டர் நரேஷ் தனக்கோடி பேசியதாவது: நாம் அவ்வப்போது நம் உடலின் ரத்தத்தில் உள்ள உப்பு, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், பல் பரிசோதனை என பார்க்கிறோம். ஆனால் மூட்டு எலும்புகளின் உறுதித்தன்மையை நாம் பார்ப்பதில்லை. தற்போது 60 வயதை கடந்தவர்கள் லேசாக தடுக்கி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பெரும்பாலும் எலும்பு முறிவு ஏற்படுவதில்லை.
காரணம் அவர்கள் அதிக நேரம் வெயிலில் வேலை செய்வதால் அவர்களுக்கு வைட்டமின் டி அதிக அளவில் கிடைக்கிறது. அன்றாடம் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நமது உடலில் வெயில் படவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் 120-ம் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பயன் பெற்றனர். அனைவருக்கும் முகாமில் எலும்பின் உறுதித்தன்மை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.விழாவில் திட்ட இயக்குனர் தண்டாயுதபாணி, செயலர் சீனிவாசன், பொருளர் ஜீவா சித்தையன் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu