தேசிய விருது பெற்ற பெண்ணுக்கு உதவிய ஊராட்சி தலைவி
தேசிய விருது பெற்ற செல்விக்கு குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா, நிவாரண பொருட்கள் கொடுத்து உதவினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் செல்வி, 35. இந்திய அளவில் முதல் பெண் டாக்சி ஓட்டுனர் என்ற தேசிய விருது பெற்றவர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் இவரை பிரிந்து சென்றதால் அத்தியாவசிய உணவு தேவைக்கு கூட வழியில்லாமல் தவித்து வந்தார்.
இது பற்றி தகவலறிந்த குப்பாண்டபாளையம் ஊராட்சி தலைவி கவிதா, செல்விக்கு ஒரு சிப்பம் அரிசி, மளிகை சாமான், காய்கறிகள் மற்றும் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி உதவினார்.
ஊராட்சி தலைவி கவிதா கூறுகையில், தேசிய விருது பெற்ற ஒருவர், எங்கள் ஊராட்சியில் இருப்பது பெருமை. இவருக்கு அரசு பணி ஏதேனும் ஒன்று வழங்கி உதவ மாவட்ட நிர்வாகத்தினர் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu