20 % பொங்கல் போனஸ் வழங்க வேண்டுமென ஏ.ஐ.சி.சி.டி.யூ கோரிக்கை

20 % பொங்கல் போனஸ் வழங்க வேண்டுமென  ஏ.ஐ.சி.சி.டி.யூ கோரிக்கை
X
குமாரபாளையத்தில் 20 சதவீதம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டுமென ஏ.ஐ.சி.சி.டி.யூ, கோரிக்கை விடுத்துள்ளது

குமாரபாளையத்தில் 20 சதம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டுமென ஏ.ஐ.சி.சி.டி.யூ, தொழில்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாவட்ட தலைவர் பொன்.கதிரவன் கூறியதாவது: குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர் களுக்கு 7 ஆண்டுகளாக கூலி உயர்வு கொடுக்கப்படவில்லை என்ற நிலையில் 23-2-2023, பிப். 23 அன்று ஏ.ஐ.சி.சி.டி.யூ. ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்தது.

பின்னர் ஏ.ஐ.சி.சி.டி.யூ, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், எல்.பி.எப், எல்.டி.யூ.சி. ஆகிய ஆறு சங்கங்கள் இணைந்து ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு விசைத்தறி தொழிலாளர்களுக்கு 80 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரியும்,அதற்காக முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று அரசு நிர்வாகத்தை வலியுறுத்தப் பட்டது.

2023, மார்ச். 1, அன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட பின்னணியில் 25 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் நடந்தது. 6 கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் 20 சதவீதம் கூலி உயர்வு என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், 10 சதவீதம்தான் அமல்படுத்தபட்டது. எனவே, இவ்வாண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒப்பந்தபடி 20 கூலி உயர்வு வழங்க வேண்டும். அதற்கு அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஏ.ஐ.சி.சி.டி.யூ, சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி