ஒபிஎஸ் அணி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம் பேச்சு

ஒபிஎஸ் அணி அதிமுக  செயல் வீரர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம் பேச்சு
X

குமாரபாளையத்தில் நடந்த ஒ.பி.எஸ்.அணி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பேசினார்

குமாரபாளையத்தில் ஒ.பி.எஸ்.அணி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் ஒ.பி.எஸ்.அணி அ.தி.மு.க.செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலர் நாகராஜன் தலைமையில் நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் பேசியதாவது: அடிமட்ட தொண்டர்களால்தான் பொதுச் செயலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பின்பற்றினார். ஆனால் தற்போது, 10 மாவட்ட செயலர்களை ஒப்புவிக்க வைத்து பொதுச்செயலர் ஆகியிருப்பது சரியல்ல. தோல்வியை காணாத கட்சிக்கு இதுவரை 9 முறை தோல்வியை பெற்று தந்துள்ளார்.

கர்நாடக வேட்பாளரை வாபஸ் பெற வைத்து, பா.ஜ.க.விற்கு ஆதரவு கொடுத்து உள்ளார். ஒ.பி.எஸ். மரியாதைக்குரிய நபர். சேலத்தில் விரைவில் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் நீங்கள் பெருமளவில் பங்கேற்று வெற்றி பெற செய்யவேண்டும். தி.மு.க. கவுன்சிலர்களுக்கு வாக்களிக்க சொன்ன செயல், முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க. கட்சிக்கு செய்த துரோகம். அவர் பசு தோல் போர்த்திய புலி அல்ல, யார் எப்படி போனாலும், தன் பதவியை தக்க வைக்க புத்திசாலித்தனமாக செயல்படும் நரி. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்திற்காக வாரச் சந்தை முன்பு வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்து எறிந்தனர். இதற்கு நிர்வாகிகள் அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.மாநில கொள்கை பரப்பு செயலர் புகழேந்தி, துணை ஒருங்கிணைப் பாளர்கள் பிரபாகரன், மனோஜ்பாண்டியன் உள்பட பலர் பேசினர்.



Tags

Next Story
ai in future agriculture