குமாரபாளையம் அதிமுகவினர் வெண்ணந்தூர் ஊராட்சியில் தீவிர வாக்குசேகரிப்பு

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி தேர்தலில், குமாரபாளையம் பகுதி அ. தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சியினர், உள்ளாட்சித் தேர்தலில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி, தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சித் தேர்தலுக்காக, மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கமணியின் அறிவுறுத்தலின்படி, அக்கட்சியினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
குமாரபாளையம் பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் நகரச்செயலர் நாகராஜன், முன்னாள் சேர்மன் பாலசுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் கண்ணனை வெற்றி பெற செய்யக்கோரி, அக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி, பிரச்சாரம் செய்தனர். நிர்வாகிகள் அர்ஜுனன், ரவி, பாஸ்கரன், வெங்கடேசன் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!