அரசு கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் நாமக்கல்லில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பங்கேற்று போட்டிகளில் பரிசு பெற்றனர்.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் நாமக்கல்லில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர். அங்கு நடைபெற்ற ஒரு வார்த்தை, ஒரு புத்தகம் என்ற வினாடி வினா நிகழ்ச்சியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசுகள் வென்றனர். மூன்றாம் ஆண்டு இளங்கலை தமிழ் பயிலும் கிருத்திகா, மூன்றாம் ஆண்டு இளங்கலை தமிழ் பயிலும் மோகன்ராஜ் முதல் பரிசும், முதலாம் ஆண்டு முதுகலை தமிழ் இலக்கியம் பயிலும் தினேஷ்குமார், இரண்டாம் ஆண்டு இளங்கலை தமிழ் பயிலும் ரோசி ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கல்லூரி முதல்வர் ரேணுகா, பேராசிரியர்கள் ரகுபதி, கீர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
புத்தக கண்காட்சி குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 46வது புத்தக கண்காட்சி தொடங்கியது.
இந்நிகழ்வில் தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகிய 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் தலா ரூ.1 லட்சம் பணத்தையும் வழங்கப்பட்டது.
என்ன சிறப்புகள்?
சென்னை புத்தக கண்காட்சிக்காக கடந்தாண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு கூடுதலாக 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதன்முறையாக திருநங்கையர் நடத்தும் பதிப்பகத்திற்கு அரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கும் தமிழக அரசு சார்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி. புத்தக கண்காட்சிக்காக கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள்,தமிழர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வைரவன் மற்றும் செயலாளர் முருகன் தெரிவித்தனர்.
அதேபோல் 20 முதல் 40 புத்தகங்கள் வைத்திருப்பவர்களுக்கு மினி ராக் சிஸ்டம் முறை அறிமுகமாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வசதியாக நெட்வொர்க் பிரச்சினை ஏற்படாமல் ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் சார்பில் வைஃபை சேவையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மற்றவர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ.10ம் வசூலிக்கப்படும் நிலையில், பள்ளிகள் மூலம் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு புத்தக காட்சியை 30 லட்சம் பேர் பார்வையிட்ட நிலையில் இந்தாண்டு கூடுதலாக 20 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புத்தக வாசிப்பாளர்களை சந்திக்க எழுத்தாளர்களும் வருகை தருவார்கள். கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்னை புத்தக கண்காட்சி ஒரு வரப்பிரசாதம் தான்..!
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu