பள்ளிபாளையம்: கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது

பள்ளிபாளையம்: கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது
X
பள்ளிபாளையத்தில், கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2018ம் ஆண்டில், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணூர் மாரியம்மன் கோவில் அருகே, கொலை நடந்தது. மேச்சேரியை சேர்ந்த ரமேஷ், 33, என்ற கஞ்சா வியாபாரி, தொழில் போட்டி காரணமாக தனது நண்பரை கொலை செய்தார்.

அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவ்வழக்கில், போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் இருப்பதாக தகவலறிந்து, பள்ளிபாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று, ரமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!