அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் விபத்துக்கள்

அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடரும் விபத்துக்கள்
X

குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் கொங்கு மண்டபம் அருகே திருப்பி விடப்படுகிறது. இந்த இடத்தில் போதுமான எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை விளக்குகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள், இல்லாத நிலை நீடித்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் நேரங்களில் ஒரு எச்சரிக்கை விளக்கு கூட எரிவது இல்லை.

நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், இந்த இடத்தில் பிரிவு சாலை உள்ளது என்பது கூட தெரியாத நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகனங்கள் கவிழ்ந்து பலரும் காயமடைந்து வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகும் முன்பு, அதிக அளவிலான எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை விளக்குகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் வைக்க வைக்க வேண்டும்.

Tags

Next Story
ai in future agriculture