கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
குமாரபாளையத்தில் நடந்த கொலை வழக்கில் தலைமை மறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன், 38. எலெக்ட்ரிசியன். இவருடன் இவர் நண்பர்களான தனபால், அரை பச்சை ஆகிய மூவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம் என கூறப்படுகிறது. அக். 4ல் இரவு 09:30 மணியளவில் மேற்படி மூவரும் பள்ளிபாளையம் சாலை தாலுக்கா அலுவலக பிரிவு சாலை பூக்கடை அருகே குடித்து விட்டு, தகறாறு செய்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் தம்பி சந்தோஷ்குமார், 30, மூவரையும் சமாதானப்படுத்தி அண்ணனை அழைத்துக்கொண்டு, மற்ற இருவரையும் அனுப்பி வைத்தார். அப்போது தனபால், அரை பச்சை இருவரும் இன்று இரவுக்குள் உன்னை கழுத்து அறுத்து கொல்லாமல் விடமாட் டோம், என்று கூறி சென்றதாக தெரிகிறது.
மறுநாள் அதிகாலை 03:30 மணியளவில் மணிகண்டன் என்பவர் சந்தோஷ்குமார் வீட்டின் கதவை தட்ட, எழுந்து வந்த சந்தோஷ்குமாரிடம், கார்த்திகேயன் கழுத்து அறுபட்ட நிலையில் உள்ளார், என்று சொன்னார். நேரில் சென்று பார்த்த சந்தோஷ்குமார் இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதன்படி வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் தலைமறைவான தனபால், அரை பச்சை ஆகிய இருவரை தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றாளிகளை தேடி வந்தனர்.
காவேரி நகர் பாலம் பிரிவு சோதனை சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில் தனபால் நின்று கொண்டிருக்க, அங்கு சென்று அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில், தன் குடும்பத்தார் பற்று தரக்குறைவாக பேசியதால் கொலை செய்ததாக தெரியவருகிறது. மேலும் அரை பச்சை என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அரை பச்சை என்கிற சுப்பிரமணி, 38, கைது செய்யப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu