பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை மீட்ட மீட்பு படையினர்

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை மீட்ட மீட்பு படையினர்
X

பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை வெப்படை மீட்பு படையினர் மீட்டனர்.

Bhavani River - குடும்ப பிரச்சனை காரணமாக பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை வெப்படை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

Bhavani River -பள்ளிபாளையம் ஓட்டல் ஒன்றில் ஈரோட்டை சேர்ந்த ஜோதி, 45, என்ற பெண் பணியாற்றி வந்தார். அவரது குடும்ப பிரச்னை காரணமாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைக்க, நேரில் வந்த மீட்பு படையினர் பெண்ணை மீட்டார்கள். சிகிச்சைகாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவரிடம் பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி இது போல் இதே பாலத்தில் பலரும் தற்கொலை முயற்சி செய்து வருவதால் இந்த பாலத்தின் தடுப்பு பக்கவாட்டு சுவற்றின் உயரம் அதிகரிக்க செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!