ஒத்த விரலில் மோடிக்கு போடும் ஓட்டு உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் - அண்ணாமலை பேச்சு

ஒத்த விரலில் மோடிக்கு போடும் ஓட்டு உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் -   அண்ணாமலை பேச்சு
X

படவிளக்கம் : குமாரபாளையம் நகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசினார்.

குமாரபாளையம் நகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக வந்து மக்களை சந்தித்தார்.

ஒத்த விரலில் மோடிக்கு போடும் ஓட்டு உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் - அண்ணாமலை பேச்சு

குமாரபாளையம் நகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக வந்து மக்களை சந்தித்தார்.

என் மண், என் மக்கள் எனும் பெயரில் ஜூலை 28 முதல் தொடங்கி, 48வது தொகுதியாக குமாரபாளையம் நகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக வந்தார். மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். காவேரி நகர் பகுதியில் தொடங்கி, ஆனங்கூர் பிரிவு வரை வந்து, அங்கு நடத்த பொதுக்கூட்ட மேடையில் பேசினார்.


குமாரபாளையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தி.மு.க. ஆட்சியில் எத்தனை மின்வெட்டு? தி.மு.க. தோன்ற படையினர் யாருடிய சொத்தாக இருந்தாலும் அபகரித்து கொண்டிருந்தனர். அதனால்தான் 10 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சி வேண்டாம் என்று வெளியே அனுப்பி இருந்தீர்கள். 2021ல் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் தி.மு.க.வினர். பாதி நாட்கள் முடிந்த நிலையில் எந்த நல்லதும் செய்தது இல்லை. போயன வாக்குறுதி கொடுத்தார்கள். நகைக்கடன் தள்ளுபடி என்றார்கள். நகையை அடகு வைத்தவர்கள் வட்டி கூட கட்ட முடியாமல் உள்ளனர். வட்டி கட்டத சில குடும்பங்கள் ஜப்திக்கு வந்துள்ளது. 511 வாக்குறுதி கொடுத்து, அதில் 99 சதவீத வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம், என்கிறார் ஸ்டாலின்.

நமக்கு தெரிந்த வரை 20 வாக்குறுதி நிறைவேற்ற வில்லை. ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள் இங்கு வந்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் இந்த தேர்வு எழுதியவர்கள் நேரடியாக அரசு வேலை என ஸ்டாலின் சொன்னார். பல போராட்டம் நடத்தி விட்டார்கள். செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை போரட்ட களமாக மாறியுள்ளது. காவிரி ஆற்றுமணல் கொள்ளையை தடுக்கவில்லை. கனிம வள அமைச்சகம், மற்றும் அமைச்சர் நியமிக்கப்படுவார் என்பது அவர்கள் தேர்தல் அறிக்கை. ஆனால் அமைச்சரும் இல்லை, அமைச்சகமும் இல்லை. அரசே கொள்ளையடிக்கிறது. அதிகாரிகள் கொள்ளையடித்து வருகிறார்கள்.

நெசவாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து 88 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். அந்த அமைச்சர் பெயர் காந்தி. இத்தனை ஊழல் செய்து பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். கவர்னர் மாளிகையில் குண்டு போடுகிறார்கள். சுதந்திரத்திற்கு பிறகு ஆதிதிராவிட நபர் அமைச்சர் ஆகவில்லை. ஆனால் நமது பிரதமர் மண்ணின் மைந்தன் முருகனை அமைச்சர் ஆக்கியுள்ளார். ராஜா, டி.ஆர்.பாலு அடித்த கொள்ளை எவ்வளவு? உங்களுக்கு தெரியும். ஆனால் நமது பிரதமர் குண்டூசி திருடி விட்டார் என்று யாராவது சொல்ல முடியுமா?

78 அமைச்சர்கள் நேர்மையாக பணியாற்றி வருகிறார்கள். விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு தருகிறது. இங்கு ஆயிரம் ரூபாய் தர ரேசன் கடையில் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆனால் டெல்லியில் பட்டன் தட்டினால் உங்கள் கணக்கில் வருகிறது. காஸ் மானியம் உள்பட, யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டாம். தமிழகத்திற்கு மத்திய அரசு 10 லட்சத்து 26 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது. பி.டி.ஆர். சொல்கிறார், இங்கு மகனும், மருமகனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தார்கள் என்று. மேலும், தாத்தா ஒரு வருடத்தில் அடித்த கொள்ளையை, பேரன் ஒரு மாதத்தில் அடிக்கிறான் என்று. தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. காமராஜர் 18 பள்ளிகள் திறந்து டாஸ்மாக் கடைகள் திறந்து உள்ளார். ராஜ்பவனில் குண்டு போடும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு உள்ளது தமிழகத்தில். மோடிக்கு ஒத்த விரலில் போடும் ஓட்டு, உங்கள் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.


இதில் மத்திய அமைச்சர் முருகன், மாநில செயலர் முருகானந்தம், மாநில துணை தலைவர் ராமலிங்கம், மாவட்ட பொது செயலர் சரவணராஜன், ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, மண்டல தலைவர் ஆவின் குமார், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!