தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி  விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

குமாரபாளையத்தில் பரிட்சைக்கு பயந்து பள்ளி மாணவி விஷமருந்தி இறந்தார்.

குமாரபாளையம் இராஜராஜன் நகரில் வசித்து வந்தவர் ஞானமணி, 15. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். செப்.29ல் காலாண்டு தேர்வுக்கு சென்று வந்த இவர், கடைசி தேர்வுக்கு செல்ல மாட்டேன். அந்த பாடம் மனப்பாடம் ஆகவில்லை. மேலும் எழுதிய தேர்வுகள் எல்லாம் சரியாக எழுதவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் கடைசி தேர்வு எழுதிவிட்டு வா, அதன் பின் 10 நாட்கள் விடுமுறை வருகிறது, என்று சமாதனம் கூறிவிட்டு, விசைத்தறி ஓட்டும் வேலைக்கு சென்று விட்டனர்.

அன்று இரவு 01:00 மணியளவில் வாந்தி எடுத்துள்ளார். பெற்றோர் எழுந்து கேட்ட போது, எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார். இவரை சேலம் ஜி.ஹெச்.ல் சேர்த்து சிகிச்சை செய்தும் பலனில்லாமல் அக். 1 இரவு 11:30 மணிக்கு இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா