வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா? டி.ஆர்.ஒ. ஆய்வு!

வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா?   டி.ஆர்.ஒ. ஆய்வு!
X

படவிளக்கம் : குமாரபாளையம் அருகே வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா? என டி.ஆர்.ஒ. சுமன் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் அருகே வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா? என டி.ஆர்.ஒ. ஆய்வு செய்தார்.

வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா? டி.ஆர்.ஒ. ஆய்வு

குமாரபாளையம் அருகே வீட்டுமனை அனுமதியில் குளறுபடியா? என டி.ஆர்.ஒ. ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனைகள் அமைக்கப்பட்டன. அரசு சார்பில் பெறவேண்டிய அனுமதிகள் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு தரப்பினர் அனுமதியை முறைகேடாக பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக இட உரிமையாளர்களும் உரிய ஆவணங்களை சமர்பித்தும் உள்ளதாக தெரிகிறது. சில நாட்கள் முன்பு இங்கு போலீஸ் பாதுகாப்புடன் குழாய் அமைக்கும் பணியும் நடந்தது. இதற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகத்தில் புகார் கொடுத்து, நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என, போலீசார் கூறினர். நேற்று டி.ஆர்.ஒ. சுமன், ஆர்.டி.ஒ. சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதன் ஆய்வறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும் என ஆய்வுக்குழுவினர் தெரிவித்து சென்றனர்.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம், சானார்பாளையம், கல்லங்காட்டுவலசு உள்ளிட்ட கிராமங்களில் கரும்புகள் வாங்க வியாபாரிகள் குவிந்து வருகிறார்கள்.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம், சானார்பாளையம், கல்லங்காட்டுவலசு உள்ளிட்ட கிராமங்களில், அதிகளவில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது..

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை பணிகள் நடைபெறும். இங்கு விளைவிக்கப்படும் கரும்புகளை வாங்க வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து அதிகளவு வியாபாரிகள் வருகை தருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் ,பொங்கல் கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக ஆத்தூர் ,சேலம், ஈரோடு, நாமக்கல் ,திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இந்த பகுதியில் முகாமிட்டு வருகின்றனர். காவிரி ஆற்று நீர் தாராளமாக கிடைப்பதினால் இங்கு விளைவிக்கப்படக்கூடிய கரும்புகள் மிகுந்த சுவை கொண்டதாகவும், சுமார் 8 அடி உயரம் வரை வளரக்கூடியதாக இருப்பதால் ,இந்த கரும்புகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.. சராசரியாக 400 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு ஐந்தாயிரம் ரூபாய் முதல் 9 ஆயிரம் ரூபாய் வரை கரும்பின் தரத்தை பொறுத்து விற்பனை நடைபெறுகிறது. வியாபாரிகள் விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது