குமாரபாளையம் அருகே அனுமதியின்றி பிளெக்ஸ் பேனர் வைத்தோர் மீது வழக்குப்பதிவு

குமாரபாளையம் அருகே அனுமதியின்றி பிளெக்ஸ் பேனர் வைத்தோர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

குமாரபாளையம் அருகே அனுமதியில்லாமல் பிளெக்ஸ் பேனர் வைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஆலாங்காட்டுவலசு பகுதியில் விநாயகர் சதுர்த்தி சம்பந்தமாக பெரிய அளவில், போக்குவரத்திற்கு இடையூறாக பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து புகார் வந்ததின் அடிப்படையில் எஸ்.ஐ. தங்கவேல் புகாரின் படி ஜீவா உள்ளிட்ட பலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

டூவீலர் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பெண் உள்ளிட்ட இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது தனியார் பள்ளி வாகனம் மோதியதில் பெண் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு, பெருந்துறையில் வசிப்பவர் மணிமாலா, 40. சமையல் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் காலை 10:10 மணியளவில் சங்ககிரியில் சமையல் வேலை செய்து முடித்து விட்டு, தன்னுடன் பணியாற்றும் சஞ்சய், 40, என்பவருடன், சஞ்சய்க்கு சொந்தமான டி.வி.எஸ். ஜூபிடர் டூவீலரில், சஞ்சய் ஓட்ட, மணிமாலா பின்னால் உட்கார்ந்து வந்தார்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை எதிர்மேடு பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான தனியார் பள்ளி வாகன ஓட்டுனர் சங்ககிரியை சேர்ந்த ஜோதிவேல், 55, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!