பாலத்தின் மீது கார் மோதியதில் இருவர் பலத்த காயம்!

பாலத்தின் மீது கார் மோதியதில் இருவர்  பலத்த காயம்!
X
குமாரபாளையம் அருகே பாலத்தின் மீது கார் மோதியதில் இருவர் பலத்த காயமடைந்தனர்.

குமாரபாளையம் அருகே பாலத்தின் மீது கார் மோதியதில்

இருவர் பலத்த காயமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் வசிப்பவர் சிவகுமார், (50). டிரைவர். இவரும் இவரது நண்பர் கோவையை சேர்ந்த பெஞ்சமின், (40), டிரைவர், இருவரும் நேற்றுமுன்தினம் டொயோடோ எடியாஸ் காரில் பெங்களூர் சென்று விட்டு, அதிகாலை 05:30 மணியளவில், திரும்ப கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பெஞ்சமின் காரை ஓட்டி வந்தார். குமாரபாளையம் கொங்கு மண்டபம் அருகே வந்த போது, அருகே உள்ள பாலத்தின் மீது வேகமாக கார் மோத, இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதும் குறித்து சிவகுமார் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் மூதாட்டி மீது, முதியவர் டூவீலரில் சென்று மோதிய விபத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் வசிப்பவர் மீனாட்சி, (58). விசைத்தறி கூலி. அதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, (70). வீட்டில் இருந்து வருகிறார். நேற்று காலை 05:30 மணியளவில் அதே பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மாரிமுத்து, தனது டி.வி.எஸ்.. எக்ஸல் வாகனத்தில் இவருக்கு பின்னால் வந்து மோதியதில், மீனாட்சி பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாரிமுத்துவை கைது செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!