96 ம் ஆண்டு ஆஷாட சுத்தசயன ஏகாதசி விழா

96 ம் ஆண்டு ஆஷாட  சுத்தசயன ஏகாதசி விழா
X

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் 96ம் ஆண்டு ஆஷாட சுத்தசயன ஏகாதசி விழாவையொட்டி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் 96 -ஆம் ஆண்டு ஆஷாட சுத்தசயன ஏகாதசி விழா நடந்தது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் 96ம் ஆண்டு ஆஷாட சுத்தசயன ஏகாதசி விழா நடந்தது.

குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் 96ம் ஆண்டு ஆஷாட சுத்தசயன ஏகாதசி விழா ஜூன் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை மற்றும் மாலை சிறப்பு வழிபாடுகள், பக்தி பஜனை பாடல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடு, கருட தரிசனம், நடைபெறவுள்ளன. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.இதற்கான ஏற்பாடுகளை பாண்டுரங்கர் திருக்கோயில் நிர்வாகம், பாண்டுரங்கர் தேவஸ்தான பஜனை குழுவினர், விட்டல் ரெகுமாயி பக்த சேவா பஜன் மண்டலியினர் செய்து வருகிறார்கள்.

பெருமாள் வழிபாடு குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது;பெருமாள் கோவிலில் கோபுரம் இருப்பின் காலணிகளை கழற்றி விட்டு கோபுரத்தை தலை நிமிர்ந்து கைகளை தலை மேல் உயர்த்தி கலசங்களை கண்டு வணங்க வேண்டும்.

பின்பு கோவிலுக்குள் சென்று கொடி மரம் அல்லது பலிபீடத்தின் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இதன் பின்னர் உள்ளே சென்று ஸ்ரீ கருடன் சந்நிதியில் ஸ்ரீ கருடனை தரிசிக்க வேண்டும். அதையும் கடந்து ஜெய விஜய துவார பாலகர்களை வணங்கி பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல வேண்டும். உள்ளே பெருமாளை தரிசிக்கும் நேரம் மௌனமாக பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை கண்களால் கண்டு ரசித்து மனதுக்குள் தியானித்து பெருமாளுக்கு செய்யும் ஆரத்தியை கண்ணாரக்கண்டு வணங்க வேண்டும். கொடிமரம் தாண்டிய பின்னர் கைகளை தலைக்கு மேல் உயர்த்த கூடாது. கைகளை மார்பிலிருந்து மூக்கு நுனி வரை மட்டுமே கொண்டு செல்லலாம். தீபாராதனை முடிந்த பின்னர் தீர்த்தம், சடாரி மற்றும் துளசி போன்ற பிரசாதங்கள் கொடுத்தால் வாங்கிக்கொண்டு சந்நிதியை நிதானமாக ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பின்னர் வெளியேறவேண்டும்இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Tags

Next Story
ai in future agriculture