கவிஞருக்கு 75வது ஆண்டு பவள விழா

குமாரபாளையத்தில் வசிக்கும் கவிஞர் மல்லை ராமநாதனுக்கு 75வது ஆண்டு விழா
பவள விழா நடந்தது
குமாரபாளையத்தில் கவிஞருக்கு 75வது ஆண்டு பவள விழா நடந்தது.
குமாரபாளையத்தில் வசிக்கும் கவிஞர் மல்லை ராமநாதனுக்கு 75வது ஆண்டு பவள விழா இலக்கிய தளம் தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக வக்கீல் மோகன், முன்னாள் நகராட்சி தலைவர் ஜெகன்னாதன் பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தனர். கவிஞர் எழுதிய கவிதைகள், கதைகள், பாடல்கள் குறித்து வாழ்த்தி பேசினார்கள். கவிஞர் குறித்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, பட்டிமன்றம் ஆகியவை மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. நாடகத்துறை அனுபவங்கள் குறித்து நாடக இயக்குனர் குணசேகரன் நினைவு கூர்ந்து பேசினார். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணி நேரில் வாழ்த்தினார்.
மல்லை ராமநாதன் பேசியதாவது: கவிதைகள் அனைவரும் விரும்புவது ஆகும். அதிலும் காதல் கவிதை சொல்ல வேண்டியதே இல்லை. சில கவிதைகள் உங்களுக்காக. என்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன். என் கண்களுக்கு நீ காட்டிய அழகை விட என் உள்ளத்துக்கு நீ காட்டிய அன்பே உயர்ந்தது. நேற்று வரை எதையோ தேடினேன்.
இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக. பார்த்தநொடியே கண்களுக்குள் ஓவியமானாய் காத்திருக்கும் விழிகளும் உன்னுடன் சேர்ந்து காவியம் பாட, புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்லை. புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை. விடியற்பொழுதில் வெளிச்சம் பரவுவதைப்போல் உன் வருகைப்பொழுதெல்லாம் காதல் பரவி அழகாகிறது என் உலகம். அழகை எதிர்பார்க்கும் பெண்களிடம் அன்பை காட்டாதே. உன்னிடம் அன்பு வைக்கும் பெண்ணிடம் அழகை எதிர் பாக்காதே. விடியலுக்கும் இரவுக்கும் இடையே உள்ள நேரத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றன உன் நினைவுகள். நீ மூச்சுக் காற்றுப்படும் தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா தேசத்திலும் உயிர் வாழ்வேன். வாழ்க்கை படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும், எனக்கு பிடித்த உன்னுடன் மட்டுமே.
கடவுளிடம் வேண்டுதலென்று எதுவுமில்லை வரமாக நீ கிடைத்ததற்கு நன்றி சொல்லுவதை தவிர. இதனால் தான் பிடிக்கும் என்ற காரணமே இல்லாமல் பிடித்தது, உன்னை மட்டும் தான். நீ என்னை விட்டு விலக நினைக்கும் அந்த நொடிக்கு முன் நீ நினைத்து பார்க்க முடியாத தூரத்திற்கு நான் சென்றிருப்பேன். நேரம் இருந்தால் என்னை நினைத்து பார். நேரில் வரவில்லை என்றாலும் நினைவில் வருவேன்.நீ நிலவும் இல்லை நட்சத்திரமும் இல்லை. இவைகளை எல்லாம் அள்ளி சூடிக்கொள்ளும் வானம் நீ. உன்னால் என் மனம் காயம் பட்டாலும் உன்னை பார்த்ததும் உன்னிடம் ஒட்டிக் கொள்கிறது என் இதயம். என்ன மாயம் செய்தாயோ. நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்.மேலும் சந்தக்கவிதை, மரபு கவிதை என பல உண்டு கவிதைகளில். தொழில் என்று ஒன்று இருந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றுதலால் எனக்கு பெயர் பெற்று தந்தது கவிஞர் என்ற சொல் தான்.இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu