குமாரபாளையத்தில் குப்பைகளை தரம் பிரிக்காத 7 கடைகளுக்கு அபராதம்

குமாரபாளையத்தில் குப்பைகளை தரம் பிரிக்காத 7 கடைகளுக்கு அபராதம்
X

குமாரபாளையம் நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் நகராட்சி ஊழியர்கள்.

குமாரபாளையம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்காத 7 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்கூடங்களில் தினசரி உருவாகும் குப்பைகள் மக்கும், மக்காத குப்பை என்றும், தனித்தனியாக பிரித்து கூடையில் வைத்து, நகராட்சி பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பலமுறை விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி நகராட்சியை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட திடக்கழிவு விதிமுறைகள் பின் பற்றமால், குப்பை தரம் பிரித்து கொடுக்காமல், இரண்டற கலந்து நகராட்சி பணியாளர்களிடம் கொடுப்பதால், மக்கும் குப்பை மூலம் உரம் தயாரிக்க முடியாமலும், மக்காத குப்பையை மறு சுழற்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் எரி பொருட்களுக்கு அனுப்ப இயலாத நிலையில் உள்ளது.

இதனால் பணியாளர்களுக்கு பணி பளு ஏற்பட்டு வருவதாக வந்த புகாரின் படி, நகராட்சி ஆணையர் சரவணன் உத்திரவின் பேரில், துப்புரவு அலுவலர் ராமமூர்த்தி தலைமையில், துப்புரவு ஆய்வர் ஜான்ராஜா, பரப்புரையாளர் அறிவுசெல்வன், கவுதம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் குணசேகரன் ஆகியோர் சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலையில் உள்ள டீ ஸ்டால், பேக்கரி கடைகள், உணவு விடுதி, மளிகை கடை உள்ளிட்ட பல இடங்களில் நேரடியாக சென்றனர்.இங்கு அவர்களிடம் குப்பையை தரம் பிரித்து தர வேண்டும் என அறிவுறுத்தினர்.

ஏழு கடைகளில் ஆய்வு செய்ததில், குப்பைகள் தரம் பிரித்து கொடுக்காதவர்களிடமும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோரரிடமும் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்து வழங்க நகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture