குமாரபாளையம் கராத்தே பயிற்சி மைய 52வது ஆண்டுவிழா

குமாரபாளையம் கராத்தே பயிற்சி மைய 52வது ஆண்டுவிழா
X

குமாரபாளையம் ஈகோ கியோகுசின்காய் கான் கராத்தே பயிற்சி மைய 52வது ஆண்டுவிழா மற்றும் கருப்பு பட்டை வழங்கும் விழாவில், தொழிலதிபர் இளங்கோ பங்கேற்று, கருப்பு பட்டை பெற்ற மூன்று மாணவர்களை பாராட்டினார். பயிற்சியாளர் தியாகராஜன் உடனிருந்தார்.

குமாரபாளையம் கராத்தே பயிற்சி மைய 52வது ஆண்டுவிழா மற்றும் கருப்பு பட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கியோகுசின்காய் கான் கராத்தே பயிற்சி மைய 52வது ஆண்டுவிழா மற்றும் கருப்பு பட்டை வழங்கும் விழா பயிற்சியாளர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சேலம், அருள்ராஜ், பவானி லட்சுமணன், குமாரபாளையம் யுவராஜ் ஆகிய மூவருக்கும் ஜப்பான் நாட்டிலிருந்து, பயிற்சி தகுதியின் அடிப்படையில் கருப்பு பட்டைகள் மற்றும் சான்றிதழ்களை தொழிலதிபர் இளங்கோ வழங்கி வாழ்த்தினார். 500க்கும் மேற்பட்ட கருப்பு பட்டைகள் பெற்று தந்தவரும், நன்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக அளவிலான கராத்தே போட்டியில் மாணவர்களை பங்கேற்க செய்து வெற்றி பெற வைத்தல், உலக அளவிலான போட்டியில் நடுவராகவும் செயல்பட்ட பயிற்சியாளர் தியாகராஜனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பயிற்சி மாணவர்களும் தியாகராஜனை பாராட்டினர்.

சான்றிதழ் வழங்கும் விழா

குமாரபாளையம் உடையார்பேட்டையில் அக்னி சிறகுகள் பொதுநல அமைப்பின் சார்பில் கராத்தே மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

கியோகுசின் கராத்தே அமைப்பின் திறனாய்வு போட்டி தலைமை பயிற்சியாளர் பாலகிருஷ்ணன், மற்றும் பயிற்சியாளர், நோபிள் உலக சாதனையாளர் ஏகானந்தம் தலைமையில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு அக்னி சிறகுகள் பொதுநல அமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. விடியல் பிரகாஷ், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார் அன்புராஜ், ஆறுமுகம், ரமேஷ், ராம்கி,தீனா உள்பட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியர் கராத்தே பயிற்சி சாகசங்கள் செய்து காண்பித்தனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு