பள்ளிபாளையத்தில் 413 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : 3 பேர் கைது

பள்ளிபாளையத்தில் 413 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : 3 பேர் கைது
X

பைல் படம்.

பள்ளிபாளையத்தில் 413 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உத்தரவுப்படி, திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில், பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சுகுமார், எஸ்.ஐ.க்கள் பிரபாகரன், சேகர் மற்றும் போலீசார் பள்ளிபாளையம் தாஜ் நகர் பகுதியில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது அங்குள்ள மளிகை கடை முன்பு சரக்கு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை ஆய்வு செய்யும் போது அதில், அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் 75 கிலோ, புகையிலை 26 கிலோ, பாண் மசாலா 133 கிலோ உள்பட மொத்தம் 413 கிலோ புகையிலை பொருட்கள், 20 க்கும் மேற்பட்ட மூட்டைகளாக கட்டப்பட்டிருந்தது.

வாகனத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் பெனிவால், (19), தினேஷ்குமார், (20), ஆகிய இருவர் இருந்தனர். அப்பகுதியில் உள்ள சுதாகரன், (44), என்பவரது மளிகை கடையில் சப்ளை செய்வதாக இருந்தனர் என்றும், சரக்குகள் பெங்களூரிலிருந்து கொண்டு வந்தது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சரக்குடன் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சுதாகர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். இதன் மதிப்பு 3 லட்சம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?