காரையே குடோனாக்கி புகையிலை பொருட்கள் விற்பனை 4 பேர் கைது
பவானியில் காரையே குடோனாக்கி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் மளிகை கடைக்காரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பவானி மற்றும் சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சசிமோகன் உத்திரவிட்டார்.
இதன் பேரில் பவானி இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.எஸ்.ஐ. பாபு மற்றும் போலீசார் மளிகை கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அந்தியூர்,மேட்டூர் பிரிவு பகுதியில் ரத்தினபாண்டியன்,57, என்பவரின் மளிகை கடையில் நடத்தப்பட்ட சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பவானியை அடுத்த சித்தாரில் மளிகை கடை நடத்தும் முனியசாமி,, தனக்கு புகையிலை பொருட்களை கொடுப்பதாக கூறினார்.
இதன் பேரில் சித்தார் விரைந்த போலீசார் முனியசாமியின் கடையில் சோதனை நடத்தி, ,புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தனக்கு மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் காரில் வரும் இருவர் புகையிலை பொருட்களை விநியோகம் செய்வதாக கூறினார்.
போலீசார் அந்த நபர்களுக்கு போன் செய்து புகையிலை பொருட்கள் தேவைப்படுவதாக கூறியுள்ளனர். அப்போது ஆம்னி காரில் வந்த இருவரை போலீசார் சற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், பவானி அருகே மூலக்காட்டை சேர்ந்த சதீஸ்குமார், 22, குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் பகுதில் வசிக்கும் தினேஷ்குமார், என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் காரில் கொண்டு வந்த 49,600 மதிப்புள்ள ஹான்ஸ், விமல் பாக்கு, உள்பட 86 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டன. இவர்கள் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu