பள்ளிபாளையத்தில் 25 லட்சம் பணம், 35 பவுன் நகைகள் திருட்டு

பள்ளிபாளையத்தில் 25 லட்சம் பணம், 35 பவுன் நகைகள் திருட்டு
X
பள்ளிபாளையத்தில் 25 லட்சம் பணம், 35 பவுன் நகைகள் திருட்டு போனது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிபாளையம் அருகே தெற்கு பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், வயது 53. இவர் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் விவசாயி ஆவார். விசைதரிகளை விற்று வந்த பணத்தை சேர்த்து வைத்ததில் 25 லட்சம் பணம் மற்றும் 35 பவுன் நகைகளை வீட்டின் பீரோவில் வைத்துவிட்டு, குடும்பத்துடன் மதியம் திருமண விசேஷத்திற்கு சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது வீடு மற்றும் பீரோ அனைத்தும் திறந்து இருந்ததாக கூறப்படுகிறது. 25 லட்சம் பணம், 35 பவுன் நகைகள் திருடப்பட்டதாக பள்ளிபாளையம் போலீசில் தகவல் தெரிவித்த வகையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future