குமாரபாளையத்தில் மாற்றுக்கட்சியினர் 20 பேர் பாஜகவில் இணைவு
குமாரபாளையத்தில் பல்வேறு கட்சியிலிருந்து பா.ஜ.க.வில் தொண்டர்கள் 20 நபர்கள் மாவட்ட பொதுச் செயலர் வழக்கறிஞர் சரவணராஜன் முன்னிலையில் இணைந்தனர்.
பாராளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், அனைத்து அரசியல் கட்சியினர் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சியிலும், பிற கட்சியிலிருந்து, தங்கள் கட்சிக்கு ஆட்களை சேர்க்க குழு அமைத்து செயல்படுகிறார்கள் என்பது போல், பிற கட்சியில் இருந்து வேறொரு கட்சிக்கு உறுப்பினர்கள் இணைத்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கட்டமாக குமாரபாளையம் பா.ஜ.க.வில், பல்வேறு கட்சியை சேர்ந்த 20 பேர் வரதராஜன் தலைமையில், மாவட்ட பொது செயலர் வழக்கறிஞர் சரவணராஜன் முன்னிலையில் இணைந்தனர். இவர்களை மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து கூறினார்கள். இந்த இணைப்பு நிகழ்வில் முன்னாள் மாவட்ட செயலர் சுகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜண்ணன், நகர பொது செயலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
குமாரபாளையத்தில் பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டம்
குமாரபாளையத்தில் பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டம் மாவட்ட பொதுச் செயலர் வக்கீல் சரவணராஜன், நகர தலைவர் சேகர் தலைமையில் நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் பங்கேற்று, கட்சி வளர்ச்சி பணிகள், அதிக உறுப்பினர் சேர்க்கை, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாடுபடுதல், பூத் கமிட்டி பணிகள் எடுத்துரைத்தல், வார்டு தோறும் வாரம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தி, தேர்தல் பணியை முடுக்கி விடுதல் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.
இதில் பாரத பிரதமரின் பத்து ஆண்டு கால சிறப்பான ஆட்சிக்கு வாழ்த்து, காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலந்து, குடிநீர் மாசுபடுவது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுப்பது, குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தாசில்தாருக்கு மனு கொடுத்தல் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் வக்கீல் தங்கவேல், துணை தலைவர் கவுதம், நிர்வாகிகள் சரவணன், சுப்பு, மகேஷ், மணிகண்டன், கலைச்செல்வன், சீனி, மூர்த்தி, மகளிரணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu