எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்: அமைச்சர் தங்கமணி

எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்: அமைச்சர் தங்கமணி
X
எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் -அமைச்சர் தங்கமணி ஸ்டாலினுக்கு அட்வைஸ் !

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் குமாரபாளையத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் நிலக்கரி வாங்கியதில் 950 கோடி ஊழல் செய்துள்ளதாக கூறுவது உண்மையல்ல, ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அதன் உண்மைத்தன்மை என்ன என்று தெரியாமல் கூட ஆளுநரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

அதில், 2011 முதல் 2015 வரை ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். 2011 முதல் 2015 வரை நான் தொழில்துறை அமைச்சராக தான் இருந்தேன் மின்சாரத்துறை அமைச்சராக இல்லை. தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் ஸ்டாலின் ஊழல் ஊழல் என்று சொல்லி மக்களை திசை திருப்ப பார்க்கிறார். எதிர்கட்சி தலைவர் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

கடந்த தேர்தலில் குமாரபாளையத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையம் ஓராண்டிற்குள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது உண்மைதான். ஆனால் அதற்காக ராஜினாமா செய்வேன் என ஒருபோதும் கூறவில்லை, பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு தற்போது நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு 25 நாட்களுக்குள் முதல்வர் அடிக்கல் நாட்டவுள்ளார் என தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture