காகித தினம் கொண்டாட்டம் : எஸ்.பி.பி. காகித ஆலை நிர்வாகி தகவல்

காசி விஸ்வநாதன், நிர்வாக இயக்குனர், சேசாயி பேப்பர் மில், பள்ளிபாளையம்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகிலுள்ள பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காகித ஆலை நிர்வாகி காகித தினம் கொண்டாட்டம் குறித்து கூறினார்.
பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காகித ஆலை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் காகித தினம் கொண்டாட்டம் குறித்து கூறினார். இவர் கூறியதாவது: மகாத்மா காந்தி காகிதம் குறித்து வலியுறுத்தி வந்தார். முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1940, ஆகஸ்ட் 1ல் கையால் தயாரிக்கப்படும் காகித நிறுவனத்தை துவக்கினார். இந்திய அரசியலமைப்பின் முதல் சில பிரதிகள் அச்சிடப்பட்டன.
காகிதத்தின் சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை, அதன் உற்பத்தி செயல்முறை மற்றும் நிலையான உள்ளீட்டு பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் நாள் காகித தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. உலகின் காகித உற்பத்தியில் இந்த காகித தொழில் கிட்டத்திட்ட ஐந்து சதவீதம் ஆகும். காகித தொழில் மூலம் நேரடியாக ஐந்து லட்சம் பேருக்கும், மறைமுகமாக 15 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
காகிதத்தில் நான்கு முக்கிய வகைகள் உண்டு.அச்சிடுதல் மற்றும் எழுதுதல் தாள்,செய்தித்தாள் தாள்,பேக்கிங் பேப்பர்,டிஸ்யூ பேப்பர் மேற்கூறிய அனைத்து வகையான காகிதங்களும் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், கல்வியறிவை பரப்புதல், செய்தி தால் மூலம் செய்திகளை பரப்புதல், நல்ல அழகிய பேக்கிங் மூலம் விரயத்தை குறைத்தல், ஆரோக்கியத்தை பாதுகாத்தல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற உன்னத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. காகிதம் மூன்று அடிப்படையான மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து மரம், கரும்பு சக்கை மற்றும் வைக்கோல் போன்ற விவசாய கழிவுகள் மற்றும் மறு சுழற்சி செய்யப்பட்ட கழிவு காகிதம். 71 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவு காகிதத்தில் இருந்தும், 21 சதவீதம் மரத்திலிருந்து பண்ணை காடுகள் மற்றும் 8 சதவீதம் விவசாய கழிவில் இருந்தும் பெறப்படுகிறது.
காடுகள் அழிப்பதன் மூலம் காகிதம் தயாரிக்கப்படுகிறது என்ற தவறான செய்தி நம் சமூகத்தில் உள்ளது. இது தவறு. இது வேளாண் சார்ந்த தொழில். இந்தியாவில் சுமார் ஐந்து லட்சம் விவசாயிகள் மரம் வளர்பதிலும், நடவு செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர். சுமார் 12 கோடி மரங்களை வளர்க்க விவசாயிகளுக்கு காகித தொழில். உதவுகிறது காகித தொழிலில் மரங்களை பயன்படுத்துவதற்கு அதிகமான மரங்கள் நடப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu