நாமக்கல் கமலாலய குளத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்ட தெப்பத்திருவிழா

100 ஆண்டுகளுக்குப் பின் நாமக்கல் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா விமரிசை
நாமக்கல்: நாமக்கல் கமலாலய குளத்தில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளின் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாமக்கல் மாநகரில் மூர்த்தி, தீர்த்தம், தலம் என மூன்று வகை சிறப்புகளுடன் புராதன சிறப்பு மிக்க மலைக்கோட்டையை ஒட்டி குடைவரை கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு நாமகிரி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி, அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவில்கள் இயற்கை எழில் சூழலில் அமைந்துள்ளன.
இந்நிலையில், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவைமுன்னிட்டு கமலாலய குளம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, அழகிய மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
முதலில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் ஆகிய மூவர் சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளுக்கு நரசிம்ம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அவை குளம் அருகே உள்ள நாமகிரி தாயார் மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. அதன் பிறகு, கமலாலய குளத்தில் அழகிய மலர்கள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தேறியது.
குளத்தைச் சுற்றிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிகளை ஆனந்தத்துடன் வழிபட்டு மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu