நாமக்கல் மாவட்டத்தில் நாளை 322 இடங்களில் கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் நாளை 322 இடங்களில் கிராம சபைக் கூட்டம்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் தினம் (1, மே), சுதந்திர தினம் (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது

கிராம சபைக் கூட்டதின் நோக்கம் என்பது ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் ஆகியவையே. கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் என்பது கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்

இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை 322 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் நாளை 2ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தல், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த மற்றும் சாரா தொழில்கள் போன்றவை குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்