காஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம்

காஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் இரண்டு நாட்களில் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது
நாமக்கல்லில் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் மற்றும் செயலாளர் செந்தில் ஆகியோர் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக சமையல் காஸ் ஏற்றும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 1,000 முதல் 1,500 லாரிகள் வரை காஸ் ஏற்றவில்லை என்றாலும், ஏற்கனவே ஏற்றப்பட்ட சமையல் காஸ் அந்தந்த பாட்டலிங் மையங்களில் இறக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஒரு நாளைக்கு மூன்று கோடி ரூபாய் வீதம், இரண்டு நாட்களில் ஆறு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதே நிலை தொடர்ந்தால் நான்கு நாட்களுக்குள் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்குள் ஆயில் நிறுவன அதிகாரிகளிடமிருந்து லாரி உரிமையாளர்களுக்கு சாதகமான தகவல் வரும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu