சேலம் முதல் மதுரை வரை மதுஒழிப்பு நடைப்பயணம்..ராசிபுரம் வந்த காந்திய சிந்தனையாளா்கள் !
நாமக்கல் : சேலம் மாவட்ட சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சி. பிராங்களின் ஆசாத் காந்தி (93), ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் காந்தி (49) ஆகியோர் மது ஒழிப்பை வலியுறுத்தவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சேலம் முதல் மதுரை வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கெனவே மேற்கொண்ட போராட்டங்கள்
இவர்கள் இருவரும் மது ஒழிப்பினை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதங்களில் பங்கேற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் முதல் சென்னை வரையும், சேலம் முதல் குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமம் வரையும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பயணத்தின் போது நடந்த நிகழ்வுகள்
ராசிபுரம், ஆண்டகளூர்கேடு பகுதியில் அருள்மிகு வெங்கடேஸ்வரர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் இவர்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கம் சார்பில், திருச்செங்கோடு காந்தி ஆசிரம தலைவர் க. சிதம்பரம், பள்ளி தலைமையாசிரியர் ரெ. உமாதேவி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu