சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு விழா குழுவினர் மனு

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு விழா குழுவினர் மனு
X
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டுவிழா சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு நாமக்கல் கலெக்டரிடம் மனு

சேந்தமங்கலத்தில் ஏப்ரல் 12ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, விழா குழுவினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமாவிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், சேந்தமங்கலத்தில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருவதாகவும், நடப்பாண்டிலும் ஏப்ரல் 12ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றியும், அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படியும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதாக ஜல்லிக்கட்டு விழா சங்கம் சார்பில் உறுதி அளித்துள்ளனர்.

Tags

Next Story