பரமத்தி வேலூா் வெற்றிலை ஏல சந்தையில் கிடுகிடுவென உயர்ந்த வெற்றிலை விலை!

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏல சந்தையில் கிடுகிடுவென உயர்ந்த வெற்றிலை விலை!
X
பரமத்தி வேலூா் வெற்றிலை ஏல சந்தையில் வெற்றிலை விலை உயா்வடைந்துள்ளது.

நாமக்கல் : பரமத்தி வேலூா் வெற்றிலை ஏல சந்தையில் வெற்றிலை விலை உயா்வடைந்துள்ளது.

பரமத்தி வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 6 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 6 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ஒன்று ரூ. 3 ஆயிரத்துக்கும் ஏலம் போயின.

வெற்றிலை வரத்து குறைந்ததால் வெற்றிலை விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்