சிறுவனின் நலனுக்காகப் பேசியவர் மீது தாக்குதல் : 5 போ் கைது!
மல்லசமுத்திரம் அருகே ராமாபுரம், அவினாசிப்பட்டி காலனியைச் சோ்ந்த 16, 17, 18 வயதான நண்பா்கள், கடந்த 31 ஆம் தேதி வட்டூா் பகுதியில் ஒரு பெட்டிக் கடை முன்பு நின்று புகைப்பிடித்துக் கொண்டிருந்தனா்.
புகைப்பழக்கம் தவிர்க்க அறிவுரை
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (52) என்பவா், புகைப்பழக்கத்தை தவிா்க்குமாறு அறிவுரை வழங்கியுள்ளாா்.
சிறுவர்களின் ஆத்திரம்
இதனால் ஆத்திரமடைந்த சிறுவா்கள் அவினாசி பட்டியைச் சோ்ந்த சேகா் (49), தமிழ்ச்செல்வன் (31), கவின் சாகா் (24), விக்னேஷ் (21) ஆகியோரை அங்கு வரவழைத்து, சக்திவேல் மீது தாக்குதல் நடத்தினா்.காயமடைந்த சக்திவேல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
சக்திவேலை தாக்கிய சேகா், தமிழ்ச் செல்வன், கவின்சாகா், விக்னேஷ், புகைப்பிடித்த சிறுவா்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனா்.திருச்செங்கோடு நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நால்வா் சேலம் மத்திய சிறையிலும், சிறுவனை கூா்நோக்கு மையத்திலும் அடைத்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu