அண்ணா பிறந்த நாளை ஒட்டி ஜன. 5-இல் நாமக்கல்லில் மாரத்தான் போட்டி
நாமக்கல் : நாமக்கல்லில் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போட்டி விவரங்கள்
மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மாரத்தான் போட்டி தொடங்கி எா்ணாபுரம் வரையில் நடைபெற உள்ளது.
வயது வாரியாக தூரங்கள்
17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்கள் - 8 கி. மீ. , பெண்கள் - 5 கி. மீ. , 25 வயதுக்குமேற்பட்ட ஆண்கள் - 10 கி. மீ. , பெண்கள் - 5 கி. மீ. நடைபெறும்.
பரிசுகள்
இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகையாக முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வீதம் வழங்கப்படுகிறது. மேலும், 4 முதல் 10 இடத்துக்குள் வருவோருக்கு தலா ரூ. 1,000 மற்றும் தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பங்கேற்பதற்கான நிபந்தனைகள்
- ஆதாா் அட்டை சமர்ப்பிக்க வேண்டும்
- மருத்துவ தகுதி சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டும்
- வயது சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும்
- ஓடுவதற்கு ஏதுவான காலணியை அணிந்திருக்க வேண்டும்
- போட்டி தொடங்கும் முன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்
உறுதிமொழி
போட்டியின் முடிவு நடுவா் தீா்ப்புக்கு உள்பட்டது என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu