குமாரபாளையத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி
குமாரபாளையத்தில் ஏப்ரல் 6 அன்று மாபெரும் மாரத்தான் போட்டிநடைபெற உள்ளது
குமாரபாளையம்JKKN கலை அறிவியல் கல்லூரிகளின் 50 வது பொன்விழாவை முன்னிட்டு தண்ணீர் மற்றும்ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாபெரும் மாரத்தான் போட்டி வரும்ஏப்ரல் 6, 2025 காலை 5.30 மணிக்கு JKKN பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாரத்தான் போட்டி 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற உள்ளது.
இந்த மாரத்தான் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகர் T. ஸ்ரீகாந்த் துவக்கி வைக்க உள்ளார். இதில் பங்கேற்க விரும்புவர்கள்ஆன்லைன் மூலம் ரூ.200 பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு வயது அடிப்படையில் இலவச பதிவு வழங்கப்படுகிறது,
மேலும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. மேலும், பதிவு செய்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் டி-சர்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9788356060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நீர் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியில் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவுப்பு விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu