இன்று 10ம் வகுப்பு தேர்வு

இன்று 10ம் வகுப்பு தேர்வு
X
நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 19,342 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (மார்ச் 28) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இம்மாவட்டத்தில் 210 பள்ளிகளைச் சேர்ந்த 10,005 மாணவர்கள், 9,033 மாணவிகள் மற்றும் 304 தனித்தேர்வர்கள் என மொத்தம் 19,342 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர். தேர்விற்காக 92 தேர்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுகளை நடத்த 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 6 வினாத்தாள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் 1,698 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். வினாத்தாள்கள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய மூன்று மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் உள்ளன. நேற்று தேர்வு மையங்களில் மாணவர்களின் ஹால் டிக்கெட் எண்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஆசிரியர்கள் மேஜைகளில் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture