நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கான பதிவு தொடக்கம்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கான பதிவு தொடக்கம்
X
17 முதல் சேலத்தில் 10 நாள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி திட்டம் சேலத்தில் மார்ச் 17 முதல் தொடக்கம் - இந்திய அரசின் சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கான முக்கிய பயிற்சி

சேலம் நகரில் இந்திய அரசின் ஸ்கில் இந்தியா மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி) சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி சேலம் 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் வரும் மார்ச் 17 முதல் 26 வரை பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

இந்தப் பயிற்சியில் தங்கத்தின் விலையைக் கணக்கிடும் முறை, தங்கத்தைக் கொள்முதல் செய்யும் முறைகள், உரைகல்லில் தங்கத்தின் தரத்தை அறியும் செய்முறைப் பயிற்சி, நகைக்கடன் வழங்கும் முறைகள், 'ஹால்மார்க்' தரம் அறியும் விதங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியை முழுமையாக முடித்தவர்களுக்கு இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழானது நகைக்கடை மற்றும் தங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற உதவும்.

நகைத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்காக நேரடியாக சேலம் 4 ரோடு, சாமுண்டி வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தை அணுகலாம். இந்தப் பயிற்சியானது தங்க நகைத் தொழிலில் தரமான மதிப்பீட்டாளர்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதையும், நகைத்துறையில் தரமான சேவையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tags

Next Story