நாகை: பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு

நாகை:  பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு
X
போலீசாரால் தேடப்படும் விநாயகமூர்த்தி
நாகை மாவட்டத்தில் விதவைபெண்ணிற்கு பாலியல்தொல்லை கொடுத்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரதெருவைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது கணவர் லியோ ஜோசப், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, ரம்யா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கணவனை இழந்த ரம்யா தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட மீனவர் அணி இணைச் செயலாளராக உள்ள விநாயக மூர்த்தி என்பவர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ரம்யா, விநாயகமூர்த்தி மீது, நாகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், பெண்ணை அவமானப்படுத்துதல் மற்றும் அங்கங்களை வர்ணித்து கொச்சை வார்த்தைகள் கூறி உல்லாசத்திற்கு அழைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நாகை மகளிர் போலீசார் அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள விநாயகமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project