வேளாங்கண்ணி அருகே கொரனா தடுப்பூசி முகாமில் கொரனா குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
தமிழகம் முழுவதும் கொரனா பரவல் இரண்டாம் அலை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 614 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 20 நபர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கிராமப்புறங்களில் கொரனா நோய் தோற்று அதிகரித்து வருவதால் கிராமங்கள்தோறும் தடுப்பூசி முகாம்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பூவைத்தேடி கிராமத்தில் இன்று நடைபெற்ற கொரனா தடுப்பூசி முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்
அங்கு வந்த பொதுமக்களிடம் ஊராட்சி சார்பில் முக கவசம் அணிவோம் .சமூக இடைவெளியை பின்பற்றுவோம், அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம், அனைவரும் தடுப்பூசி ஊசி கொள்வோம் என்பது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu