வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடிக்கு சீல் வைப்பு

வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடிக்கு சீல் வைப்பு
X

வைத்தீஸ்வரன்கோயிலில் ஊரடங்கு விதியை மீறி திறந்த மீன்கடையை பேரூராட்சி அதிகாரி மூடி சீல் வைத்தார்.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடியை பேரூராட்சி செயல் அலுவலர் இழுத்து மூடி சீல் வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான மீன் விற்பனை அங்காடி அமைந்துள்ளது.

கொரோனா தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த 24 ஆம் தேதி முதல் மீன் மற்றும் இறைச்சி விற்பனையும் தடை செய்யப்படுள்ளது.

இந்நிலையில் வைத்தீஸ்வரன்கோவில் மீன்விற்பனை அங்காடியில் ஊரடங்கு விதிகளை மீறி சிலர் மீன் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து மீன் அங்காடியை ஆய்வு செய்த பேரூராட்சி செயல் அலுவலர் குகன், மீன் அங்காடியை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து உடனடியாக கதவுகளை பூட்டி பேரூராட்சி ஊழியர்கள் சீல்வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!