மயிலாடுதுறையில் இருந்து 2000 டன் நெல் மூட்டை தருமபுரிக்கு அனுப்பிவைப்பு

மயிலாடுதுறையில் இருந்து 2000 டன் நெல் மூட்டை தருமபுரிக்கு அனுப்பிவைப்பு
X

மயிலாடுதுறையில் இருந்து சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்ட நெல் மூட்டைகள். 

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் தர்மபுரிக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் மூலம், கொள்முதல் செய்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக அடுக்கி வைத்துள்ளனர்.

அவற்றை அரைவைக்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு 100 லாரிகள் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டு, ரயில் நிலையத்தில் உள்ள 50 சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றி தர்மபுரியில் உள்ள அரிசி அரவை மில்லுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.

Tags

Next Story
ai automation in agriculture