பூம்புகார் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்

பூம்புகார் அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்
X

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தரங்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடங்கிவைத்தார்.

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரங்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.எல்.ஏ நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரங்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களை சந்தித்து மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். செம்பனார்கோவில் வட்டாரத்தில் இரண்டு மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் கூடுதலான மையங்களில் தடுப்பூசிகள் போடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் எம்.எல்.ஏ நிவேதா முருகன் தெரிவித்தார்.

பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தினார். இதில், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கினணப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!