அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள்  போராட்டம்
X

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 

தற்போது, குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.

மயிலாடுதுறை தாலுகா குளிச்சார் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. ஆண்டுதோறும் நெல் அறுவடை பருவத்தில் திறக்கப்படும் இந்த நிலையம், கடந்த சம்பா பருவம் வரை செயல்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது, குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

இதனால், விவசாயிகள் கழனிவாசலில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்மணிகளை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குளிச்சார் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்யும் குளிச்சார், மன்னம்பந்தல், செருதியூர் உள்ளிட்ட 5 கிராம மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். இதுகுறித்து, துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படாத காரணத்தால் ஆத்திரமடைந்த அக்கிராம மக்கள், நெற்கதிர்களுடன் மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் மன்னம்பந்தல் கடைவீதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, குளிச்சார் ஊராட்சியில் விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!